BB 7 Promo : கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இந்த சீசனில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் (BB 7 Promo).
அவரைத் தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார்,
ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா, ப்ராவோ, அன்னபாரதி, தினேஷ், கானா பாலா என மொத்தம் 5 பேர் உள்ளே சென்றனர். இதில் அன்னபாரதி முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த பிக்பாஸ் 7 சீசனில் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் என ஒரு புதுமையான கான்செப்ட்டில் நடைபெறுவதால் அனைவரும் ஆர்வமமாக பார்த்து வருகின்றனர்.

இதனிடையே ரசிகர்களின் பேவரைட் நபரான பிரதீப் ஆண்டனி, அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு திடீரென வெளியேற்றப்பட்டார்.
இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை இணையத்தில் தெரிவித்தும், பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், வெளியே வந்த பிறகு பிரதீப் ஆண்டனி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை கூறிவிட்டு, ‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக்கையும் டேக் செய்திருந்தார்.
இதனால், கொந்தளித்த கமல்ஹாசன் வார இறுதியான இன்றைய எபிசோட்டில், “தீர விசாரித்ததாலேயே வந்த தீர்வு இது… இது தீர்ப்பு அல்ல என்றும், குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும்.
இது உலக நியதி.. குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? இந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.