அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில் சரியாக பூட்டப்படாத காருக்குள் உணவு பொருட்கள் இருப்பதை கவனித்த கரடி பற்களால் கதவை திறந்து காருக்குள் புகுந்துள்ளது.இந்த நிலையில் காருக்குள் சிக்கி கொண்ட கரடி வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது.
கார் கதவு தானாக சாத்தி கொண்டதால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட கரடி, வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து உள்ளேயே உயிரை விட்டது.
காருக்குள் கரடி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
நாய்களை விட கரடிகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால் காருக்குள் உணவு பொருட்களை வைக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும் இது தொடர்பாக வனபகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.