நம்ம வீட்டு வைத்தியர் -கொட்டிக்கிடக்கும் மருத்துவக்குணம்

benefits of green leaf -vegetables

யார் வீட்டில் முருங்கை மரம் நிற்கிறதோ, அவர்கள் குடும்பத்தை நோய் சீக்கிரம் அண்டாது என்று நம் முன்னோர் சொல்வார்கள். ஏனென்றால், முருங்கை என்பது வெறும் மரம் மட்டும்மல்ல வீட்டிலேயே இருக்கும் வைத்தியர் என்பதை மறுக்க முடியாது.
முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. முக்கியமாக, முருங்கைக் கீரையும் முருங்கைக்காயும் தனித்துவம் வாய்ந்தவை.

முருங்கைக் கீரையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குறைந்த கலோரி மட்டுமே கொண்டது என்றாலும் இதனை அளவாகவே உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். முருங்கைக் கீரையை அரைத்து, சாறு பிழிந்து கண்ணில்விட்டால், கண் வலி நீங்கும். தேனுடன் சேர்த்துக் கண் இமைகளில் தடவிவந்தால், கண் நோய்கள் குணமாகும்.

benefits-of-green-leafy-vegetables-
benefits of green leaf -vegetables

முருங்கையில் இதில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன் இதில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகிறது.

முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் அது எலும்புகளுக்கு வலுவை அளிப்பதோடு எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது..

அதுமட்டுமல்ல முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்குவதோடு முருங்கை பூவை பாலில் வேகவைத்த பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். இவ்வாறு பல மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது முருங்கை.

Total
0
Shares
Related Posts