பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு வீரபத்ரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய டிப்போவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அப்பகுதியே கரும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
10க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் சிக்கி எரிந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இதுரை தெரியாத நிலையில் இது போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://x.com/TamildiaryIn/status/1718904508070469758?s=20
இந்த நிலையில் தீ விபத்து காரணமாக பேருந்துகள் நெருப்புடன் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.