இலங்கையில் பிறந்து அங்கேயே செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியாவுக்கு உலகநாயகன் தொகுத்து வழங்கிய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் செல்ல பிள்ளையாக இருந்த லாஸ்லியா தமிழ் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம்பிடித்துவிட்டார் . மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குநர்கள் கண்ணில் பட்ட லாஸ்லியா தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக கலக்கி வருகிறார் . அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது.
சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் க்யூட்டான புகைப்படம் வெளியிட்டு அசத்துவார். அந்த வகையில் நடிகை லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது
லாஸ்லியாவின் அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் பார்த்த லாஸ்லியாவா இது, ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.






