கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி – ராஜு ஜெயமோகன் தலைவரா?

bigg-boss-tamil-5-grand-launch
bigg boss tamil 5 grand launch

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ரசிகர்களின் பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது.

கடந்த சீசனை விட சில மாறுபட்ட அமைப்புக்களுடன் உருவாக்கப்பட்ட பிக்பாஸ் 5 வீட்டில், போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்றைய தினம் இடம்பெற்றது.
பொதுவாக முதல் நாளில் 15 அல்லது 16 போட்டியாளர்களை தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்களை களமிறக்கியுள்ளனர்.

இந்த சீசனில் முகம் தெரியாத பல நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் வெகு குறைவாகவே உள்ளனர்.

குறிப்பாக விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலர் மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்களாக இருக்கிறது. ஏனைய போட்டியாளர்கள் பெரும்பாலும் பரிட்சயமற்ற நபர்களாகவே உள்ளனர். இந்த சீசனில் ஆண்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் பங்கேற்று உள்ளனர்.

bigg-boss-tamil-5-grand-launch
bigg boss tamil 5 grand launch

அதன் படி பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் ராஜு ஜெயமோகன், அபிஷேக், அபிநய், வருண், இமான் அண்ணாச்சி , சிபி, நிரூப் என 7 ஆண் போட்டியாளர்களும், பெண் போட்டியாளர்களாக இசைவாணி, மதுமிதா, பிரியங்கா, பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சங், ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ஐகி பெர்ரி, தாமரைச்செல்வி என 10 கலந்து பேர் கொண்டுள்ளனர்.

மேலும், தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கையான நமிதா மாரிமுத்து போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் முதல் ப்ரோமோ வெளியாகியது.

அதில் இந்த வார தலைவருக்கான தேர்வு நடைபெற்று இருக்கிறது. இதில் முதல் ஆளாக ராஜு ஜெயமோகன் நான் பாத் ரூம் அணி தலைவராக ஆக விரும்புகிறேன், என கூற பிரியங்கா அதுதான் ஈசி என ஆரவாரம் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2வது ப்ரோமோ வெளியாகியது. அதில் பிக்பாஸ்சின் அடிப்படையான விதிமுறை, போட்டியாளர்கள் அனைவரையும் படம் எடுக்கபடுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் குளியலறையிலோ, கழிவறையிலோ கேமிராக்கள் பொறுத்தப்படவில்லை”.. போன்ற விதிமுறைகளை குறித்து ராஜு ஜெயமோகன் பட்டியலிட்டு இருப்பார்..

அதனை தொடர்ந்தது 3 வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் 3வதாக வெளியான புரோமோவில், ஒரு கதை சொல்லு ராம்.. என தொடங்குவதோடு, ராஜு மோகனின் காமெடி கலந்த கதையும், பிக்பாஸ் போட்டியாளர்களின் அரட்டையும் கலகலப்பாக நகர்கிறது.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நேற்று தொடங்கிய நிலையில் இது குறித்த ப்ரோமோக்கள் அடுத்த்தடுத்து வெளியாகி இருப்பது ரசிகர்களின் பிக்பாஸ் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகபடுத்தி உள்ளது

Total
0
Shares
Related Posts