Ram Temple –இராமன் கோவிலை பிரதமர் மோடி திறப்பது குறித்து சங்கராச்சாரியார் எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன?
என்று திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்கீ. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மறக்கடிக்க திசை திருப்பும் யுக்தி!
அயோத்தியில் கட்டி முடிக்கப்படாது அரை குறை நிலையில் உள்ள இராமன் கோவிலில், அவசர அவசரமாக இம்மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் இராமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்ற நிலையில்,
‘‘நாங்கள் அங்கே சென்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது’’ என்று முதலில் பூரி சங்கராச்சாரியாரும், பிறகு மற்ற மூன்று சங்கராச்சாரிகளும்
‘‘இது ஸநாதன தர்மத்திற்குப் புறம்பானது’’ என்ற கூறி, அறிவிப்புச் செய்திருப்பதற்குப் பா.ஜ.க.வின் பதில் என்ன தெரியுமா?
இராமன் கோவிலை பிரதமர் மோடி திறக்க சங்கராச்சாரிகள் எதிர்ப்பு
‘‘அவர்கள் வைஷ்ணவர்கள் அல்ல; ஸ்மார்த்தர்கள்’’ என்று சொல்வதுதானா? ‘‘ஹிந்துக்களே, ஒன்று சேருங்கள்’’ என்று குரல் கொடுத்து, ‘ஹிந்துராஷ்டிர அமைப்பு’ என்று கூறி,
‘‘நாட்டில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே’’ என்ற பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களது பேச்சுக்கு இது நேர்முரணாக இல்லையா?
பா.ஜ.க. சங்கராச்சாரிகள் – அது அவர்களது துறை என்பது அனைவருக்கும் தெரியும்; கட்சியின் பதில் ஒரு வெற்றுச் சமாதானமாக இருக்கிறது என்பதன்மூலம்,
உலகம் ஒன்றைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது
இது அசல் சந்தர்ப்பவாதம்தானே!பிரதமரின் பா.ஜ.க. உண்மையை மக்களுக்குப் புரிய வைத்துள்ளது.
also read :https://itamiltv.com/ys-sharmila-reddy-appointed-as-the-president-of-the-andhra-pradesh-congress/
மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட்!
இராமனை தேர்தல் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தி, பக்தி மயக்க பிஸ்கெட்டுகளைத் தந்து, மக்களின் மதவெறியை மூலதனமாக்கி, வாக்கு சேகரிக்கும் ஒரு வித்தை என்பதை நாடு உணரத் தலைப்பட்டு இருக்கிறது.
அதனால்தான் இந்த வித்தைக்கு தாங்களும், காட்சிப் பொருளாகவோ, உடன்படுவோராகவோ இருக்கமாட்டோம் என்று அவர்கள் அனுப்பிய அழைப்பைப் புறக்கணித்துள்ளனர்
காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்டுகளும், அகிலேஷ் கட்சியும், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு கட்சியும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும்!
also read :https://x.com/ITamilTVNews/status/1747150590751523249?s=20
வாக்குறுதிகளை மறைக்க பக்திப் போர்வை!
‘பக்தி’ என்பது தனி மனிதனைப் பொறுத்தது; அரசு, அமைப்பு, தேர்தல் என்பது ஜனநாயகத்தின், பொதுமக்களின் உரிமை என்பதை நன்கு புலப்படுத்தியுள்ளனர்.
பிரச்சார அம்புகள் கிளம்புவதைத் தடுத்து, திசை திருப்பவே – பக்தியை, மதத்தை, இராமர் கோவில் திறப்பை(Ram Temple ) – பிரதமர் மோடி அவர்களே சொல்லும் ஸநாதனத்திற்கு விரோதமாக நடந்துகொண்டு,
ஒன்றிய அரசு, உ.பி. அரசு இயந்திரத்தை முழு மூச்சாகப் பயன்படுத்திடும் நிலை. உறுதி எடுத்துக்கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை மூலக் கொள்கையை காலில் போட்டு மிதிப்பது அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?
என்று திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்கீ. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.