பீகார் மாநிலத்தில் 18 வயது நிரம்பிய மகளை அவரது தந்தை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்த நிலையில் போலீசார் தந்தையை கைது செய்தனர்.
இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது.
இந்நிலையில் தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூர தந்தையை 18 வயது இளம்பெண் போலீசில் சிக்க வைத்துள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே உள்ள ரோசிரா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். 50 வயதான இவரது தந்தை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளம்பெண்ணை மிரட்டி அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் சிறுமி இதுகுறித்து குடும்பத்தினரிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது தந்தை செய்யும் கொடுமைகளுக்கு உரிய தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுமி, தந்தை வன்புணர்வு செய்ததை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார்.
பிறகு இந்த வீடியோவின் ஒருபகுதியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிறுமி நீதி கேட்டார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் போலீசார் விசாரணையை துவக்கினர். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியும் தனது தந்தை மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.