குடும்பத்தில் 12 ஓட்டு..” பஞ்சாயத்து தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்.. அதுவும் அவருடையதாம்…!

குஜராத் மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்ற சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தில் 12 ஓட்டு இருந்தும் ஒரே ஒரு ஓட்டு பெற்றிருந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

குஜராத் மாநிலம் வாப்பி மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் சந்தோஷ் என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வந்ததையடுத்து, ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றிருந்தார். அந்த ஓட்டும் அவருடைய சொந்த ஓட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் ஆளும் கட்சியான பாஜக வேட்பாளர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஒரு ஓட்டு மட்டும் பெற்றிருப்பதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Total
0
Shares
Related Posts