Will Sink BJP-PMK : “தமிழகத்தில் தமிழிசை போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம்”
“செல்வப்பெருந்தகை பேட்டி”..
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
“உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர பட்டியலிடப்பட்ட எண்ணுடன் தேர்தல் ஆணையத்திற்கு அளித்து பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்திருப்பது,
இன்னும் ஜனநாயகம் மாண்டு போகவில்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
இதையும் படிங்க : ”பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு நிர்பந்தம்..”அதிமுக முன்னாள்அமைச்சர் பரபர
குஷ்பு சொன்ன அதே கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழக மக்களை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி உள்ளார் நிர்மலா சீதாலாமன். இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர் மோடி சர்வதிகார ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி் நடத்திக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க ஆட்சியின் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது. மூழ்கும் (பா.ஜ.க) கப்பலில் பா.ம.க ஏறியுள்ளது. அதுவும் சேர்ந்து மூழ்கும் Will Sink BJP-PMK.
தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும். விஞ்ஞான ரீதியாக பா.ஜ.க., ஊழல் செய்கிறது.
இதையும் படிங்க : “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!
இரண்டு, மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும்.
தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
ஓரிரு நாட்களில் தேதிகள் வெளியிடப்படும்” என்று கூறினார் .