முரசொலி (murasoli case) அலுவலகம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கடந்த 2019ம் ஆண்டு பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால், இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்று கூறி, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து அவர்களின் விளக்கத்தையும் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முரசொலி (murasoli case) அலுவலகம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி (murasoli case) அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1744994568049954936?s=20
பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
இது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கக் கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக மனு தொடர்ந்தது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/97-7-buses-announcement-that-97-7-buses-are-running-across-tamil-nadu/
திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளார்.