BJP National Council meeting |டெல்லியில் இன்று பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது.இந்த கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை ஏற்பாடுகளை பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவின், தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் என 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதற்காக, டெல்லி பாரத் மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தவித்த மக்களை பற்றி கவலைபடாத நிதியமைச்சர்…கோவில் புரோகிதரின் சம்பளம்..-கனிமொழி!
இதில், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில்பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று பிற்பகல் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
மேலும் நாடு முழுவதிலும் இருந்து 11,500 செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Bank Account Frozen |காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலைவணங்காது.. ராகுல் அட்டாக்!
நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல், மக்களவை தேர்தல் வியூகம், மாநிலங்களில் கூட்டணிகளை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அயோத்தியில் ராமர் கோவில், பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை, ஜி20 மாநாடு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758749070360010990?s=20
தற்போதைய கூட்டத்திற்கு 11,500-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில்(BJP National Council meeting), ஒரு அரசியல் தீர்மானமும், ஒரு பொருளாதார தீர்மானமும் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
அரசியல் தீர்மானம், 2024 மக்களவை தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்குழு கூட்டத்தின் ஒவ்வொரு அமர்விலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.