இந்திய குடியரசு தலைவர் பதவிக்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு பாஜக கூட்டணியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த நிலையில் ,பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்த நிலையில்எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரான முர்மு போட்டியிடுகிறார்.
64 வயதான இவர், தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார். இருப்பினும் தந்து அரசியல் பயணத்தை கவுன்சிலராகத் தொடங்கய திரௌபதி முர்மு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக பதவி ஏற்றார்.
தொடர்ந்து ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் இரண்டு முறை பாஜக சட்டமன்ற உறுப்பினரக ஒடிசாவில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.