பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியுன் இளைஞரணி சார்பில் தமிழகம் முழுதும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து தாமரை தொட்டி, கோ.புதூர், மூன்று மாவடி வழியாக ஐயர் பங்களா வரை 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா ஆகியோர் பிரதமர் மோடி 8 ஆண்டுகளாக பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் சாதனை விளக்க தூண்டறிக்கைகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.