திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் இரு வாலிபர்களின் சடலம் கிடந்தன. முகவரி தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் ரயில்வே காவல் துறையினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரு வாலிபர்கள் சடலம் இருப்பது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ளவர்கள் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இரு சடலதின் முகங்களும் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஒரு வரது கையில் மகேஸ் என பச்சை குத்திருந்தார் மற்றொரு முகம் தெரியவில்லை.
தூத்துக்குடி கன்னியாகுமாரி திருச்செந்தூர் திருப்பரங்குன்றம் வழியாக மதுரையை நோக்கி வந்த ரயிலில் 40 வயது மதிக்க தக்க இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர்களின் பையில் ரயில் பயணச்சீட்டு வைத்துள்ளனர். இவர்கள் திருப்பரங்குன்றத்தில் பலியானது எப்படி என்ற பல்வேறு கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
மேலும், அவர்கள் வைத்திருந்த ஃபோன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலையும் உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.