மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் (bomb threat) விடுக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் உஸ்பெஸ்கிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அஜூர் ஏர் விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி புறப்பட்டுச் சென்றது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் பயணித்த நிலையில், அந்த விமானத்தில் 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
அந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் கோவா டபோலிம் விமான நிலையத்துக்கு வந்து இறங்க இருந்த நிலையில், மாஸ்கோவில் இருந்து கோவா வந்த அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் (bomb threat) வந்ததுள்ளது.
அந்த மிரட்டல் கோவா விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு இமெயில் மூலம் வந்தது. மேலும், அந்த மின்னஞ்சலில் அஜூர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, உடனடியாக கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான், அந்த விமானம் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரை இறங்கியது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த விமானம் தரை இறங்குவதையொட்டி உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால், சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மேலும், இது ஒரு வதந்தி என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சோதனைக்கு பிறகு மறுநாள் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.