ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிபில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதை அடுத்து அந்நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து பல கட்டுப்பாடுகளும் வன்முறை சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 90-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.