Boom : ஜனவரி மாத தொடக்கத்தில் சற்று ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை இன்று (19.01.24) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதுதான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையியில் விற்க எளிதானது.
நேற்று (18.01.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,780க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : எகிறியது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
இன்று ஜனவரி 19ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது (Boom).
நேற்று (18.01.24),18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து கிராம் ரூ.4,735க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.37,880க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று ஜனவரி 19ஆம் தேதி, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து கிராம் ரூ.4,759க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை நிலையில்,
இதையும் படிங்க : ராமர் கோவில்: அரசியலா? ஆன்மீகமா?
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.20க்கும் ஒரு கிலோ ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.