#Breaking | 3 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV-D2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட், இஒஎஸ்-07 உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்தது .இருப்பினும் இன்று எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.
இந்த எதிர்கால எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட், இஒஎஸ்-07 செயற்கைகோள்கள் தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 3 செயற்கைக்கோள்களும் புவி சுற்ற்வட்ட பாதையில் 356 கி.மீ. உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.