அனைத்து சமிஞ்சைகளும் சந்திராயன் 3 விண்கலத்தில் நேற்று இரவு பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் இன்று பிற்பகல் 3 மணிக்கு லாண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து பதிவேற்றப்பட்டுள்ள சமிஞ்சைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இது புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி நுழைந்தது. சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த பிறகு, ஆகஸ்ட் 6, 9, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் செயற்கைக்கோளில் சுற்றுப்பாதையின் வேகம் குறைக்கபட்டு ஆகஸ்ட் 17 அன்று விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரின் பிரிக்கப்பட்டது.
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்கபட்டது. இந்த நிலையில் சந்திரயான் 3′ நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி தொடங்கும் என்றும் கூறப்படுள்ளது.
இந்நிலையில் விக்ரம் லண்டனில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
எனவே இன்று பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் லெண்டலில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் எனவும் சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.