பிரிட்டனில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் மனைவியின் வருமானம் குறித்து வாயை பிழக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் 45 நாளில் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க முடியாமல் மோசமாக்கிய காரணத்தால் தானாக முன்வந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்தப் பிரதமர் யார் என்ற போட்டியில் போரிஸ் ஜான்சன் மீண்டும் கலந்துகொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியேறினார்.
இதைத் தொடர்ந்து ரிஷி சுனக்-ஐ எதிர்த்துப் போட்டிப்போடும் ஓரே நபராக இருந்த பென்னி மோர்டான்ட் வெறும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதன் மூலம் ரிஷி சுனக் போட்டியின்றிப் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பிரிட்டன் அரசர் சார்லஸ் உடனான சந்திப்பிற்குப் பின்பு ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி-யின் வருடாந்திர வருமானம், சொத்து மதிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தி. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் டிவிடெண்ட் தொகையாக மட்டும் சுமார் 126.61 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளார்.
3.89 கோடி பங்குகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியான தகவல்களின் படி அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 3.89 கோடி பங்குகள் அல்லது 0.93 சதவீத பங்குகளை வைத்திருந்துள்ளதாகப் பங்குச் சந்தைகளில் இன்போசிஸ் நிறுவனம் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்போசிஸ் பங்கு விலை ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய இதே செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இன்போசிஸ் பங்குகள் 0.55 சதவீதம் உயர்ந்து 1,527.40 ரூபாய்க்கு முடிந்தது. இதன் மூலம் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 5,956 கோடி ரூபாயாக (சுமார் 721 மில்லியன் டாலர்) உள்ளது.
ஈவுத்தொகை இன்போசிஸ் நிறுவனம் 2021-22 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையை இந்த ஆண்டு மே 31 அறிவித்தது, இதில் இன்போசிஸ் முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதேபோல் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக இந்த மாதம் ஒரு பங்கிற்கு 16.5 ரூபாயாக அறிவித்தது.
126.61 கோடி ரூபாய் இவ்விரு ஈவுத்தொகை மூலம் ஒரு பங்கிற்குச் சுமார் 32.5 ரூபாய் ஈவுத்தொகை அளித்துள்ளது இன்போசிஸ். இதன் மூலம் 3.89 கோடி பங்குகளை வைத்துள்ள அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் பங்கு வாயிலாக 126.61 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளார்.
உச்சத்தில் இன்போசிஸ்:
இந்தியாவில் சிறந்த ஈவுத்தொகை அளிக்கும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதாக இன்போசிஸ் விளங்குகிறது. 2021 ஆம் ஆண்டில், அது ஒரு பங்கிற்கு மொத்தம் 30 ரூபாயை ஈவுத்தொகையை வழங்கியது, இதன் மூலம் அக்ஷதா மூர்த்தி 2021 ஆம் ஆண்டில் 119.5 கோடி ரூபாய் வருமானத்தை வழங்கியுள்ளது.
வரிப் பிரச்சனை ரிஷி சுனக் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர், ஆனால் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இந்திய குடியுரிமை பெற்றவர். இந்த நிலையில் பிரிட்டனில் வசிக்கும் அக்ஷதா மூர்த்தி பிரிட்டனில் தங்கியிருக்கும் 15 ஆண்டுகள் வரை வரி செலுத்தாமல் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இதை வரி ஏய்ப்பு எனப் பிரிட்டன் நாட்டின் அரசு தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.