நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி என்ற இளைஞர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது .
தலை உள்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுவாங்கிய அந்த இளைஞர் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் .
Also Read : தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் விவகாரம் – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!!
நீதிமன்ற வாசலில் மக்கள் கூட்டம் நிறைந்தும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் துணிச்சலாக இந்த கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திய 7 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் ஏறி மாயமானதாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொலையாளிகளை பிடிக்க விரைந்த போலீசார் தற்போது இந்த வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன் கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாயாண்டி முக்கிய குற்றவாளி என்றும் அதற்கு பழிதீர்க்கும் விதமாகவே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளாதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.