TN Governor | அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினமான இன்று (04.03.2024) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், சனாதன தர்மத்திற்கு நெருக்கடி ஏற்பட்டபோது அய்யா வைகுண்டர் அதை பாதுகாத்தார். மேலும், அனைவரும் அறியும்படி அதை கற்றும் கொடுத்தார். அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் கோட்பாடு. நாம் அனைவரும் தெய்வீகத்தின் குழந்தைகள். அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் நாம் வரவேற்கிறோம். அதனால்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பாக இந்தியாவில் கிறிஸ்துவ மதம் வளர்ந்தது. முகமது நபி காலகட்டத்தில் மிகப்பழமையான மசூதி இந்தியாவில் கட்டப்பட்டது. ஏனென்றால் மதங்களை நாம் வேறுபடுத்தி பார்க்கவில்லை. அனைவரும் ஒரே குடும்பம் என நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ்.சுக்கு வைக்கப்பட்ட செக்..?- சுசகமாக பேசிய வானதி சீனிவாசன்!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளை பிடித்த ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் கைப்பற்ற , ‘அது சாத்தியமில்லை’ என அவர்களுக்கு தோன்றியது. காரணம், இந்தியா பெரிய நாடாக இருந்தாலும், பல்வேறு மொழி, இனம் சார்ந்த மக்கள் அனைவரும் சனாதன தர்மத்தின் கீழ் ஒற்றுமையாக இருந்தார்கள். எனவே, அவர்கள் முதலில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதுதான் அவர்களின் செயல் திட்டமாகவும் இருந்தது. 1813ஆம் ஆண்டு இந்தியாவில் சனாதனத்தை ஒழிக்க பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் சட்டமே கொண்டுவந்தார்கள்.
ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்புவதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள். சிலர், ராபர்ட் கால்டுவெல் பட்டப்படிப்பு முடித்ததாக எழுதுகிறார்கள். விக்கிபீடியாவிலும் அதுபோலவே உள்ளது. ஆனால், அவர் பள்ளிப்படிப்பையே தாண்டவில்லை. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற போலியான நூலை எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1764606488201527603?s=20
1825 லிருந்து 30 காலகட்டங்களில் இந்தியாவில் உள்ள பல பள்ளிகளை ஆங்கிலேயர்கள் மூடினார்கள். கிறிஸ்துவ மிசனரிகள் மட்டுமே பள்ளிகள் நட்த்த அனுமதிக்கப்பட்டனர். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே அனுமதியும் வஹ்ழங்கப்பட்ட்து. இதுதான் வரலாற்று உண்மை. இயேசு கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன். பைபிளில் எந்த தவறான கருத்துக்களும் கிடையாது” எனக் கூறிய ஆளுனர், “1833 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் பிறந்த பிறகு சனாதன தர்மத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்” என தெரிவித்தார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் திரு நெல்வேலியில் சுமார் 50 ஆண்டுகாலம் தங்கியிருந்து சமயப்பனியுடன், தமிழ்ப்பணியும் செய்தபோது 1856 ஆம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை ஆங்கில மொழியில் எழுதி இருந்தார். அந்த நூலில், ‘உலகின் முதல் மொழி தமிழ்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, அந்த நூலை போலியானது என ஆளுநர் கூறியிருப்பது தமிழ் பற்றாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.