குளோபல் ஸ்டார் தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் 2024 பொங்கல் அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் . இவரது மிரட்டலான நடிப்பில் தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர் .
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு மெலடி கிங் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார் . மேலும் இப்படத்தின் தனுஷ் உடன் பிரியங்கா மோகன் , ஜான் கொக்கென், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமாரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தாறுமாறாக உருவாகி வரும் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .
இந்நிலையில்,இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை டக்கரான போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது . கேப்டன் மில்லர் படம் எப்போது திரைக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழுவின் இந்த அறிவிப்பு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .