நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் .தேமுதிக அலுவலகத்தில் அவரது முழு உருவ சிலை திறக்கப்பட்டுள்ளது.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள விஜயகாந்த் சிலையும் பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :
இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது, பெண் தலைவர்களுக்கு பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். பாதுகாப்பு எதற்காக திரும்பப் பெறப்பட்டது என்பது தெரியவில்லை.
தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. பாதுகாப்பை எதிர்பார்த்து நாங்கள் இல்லை, ஆனால் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.