நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ளதால் பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிளார். அப்போது கூட்டத்தில் ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லியதால் அவரை ஒருமையில் பேசியதுடன் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என்றுள்ளார். மேலும் போலீசார் குறித்து அவதூறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.