தமிழ்நாட்டில் முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
உலகில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்க 17 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் இதுவரை பல ஆயிரம் கோடி முதலீடுகான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது .
அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டில் 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.