டெல்லியில் காவிரி(cauvery) மேலாண்மை ஆணையக் கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி (13-10-2023) நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன்பு காணொலி மூலம் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு 13/9/2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதில் தமிழகத்துக்கு 3,000 கன அடிநீர் திறக்க உத்தரவிடப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, வினாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்துவோம் என்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.