உச்சநீதிமன்றத்தில் காவிரி(Cauvery)நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.
காவிரி(cauvery) நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 2-ம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், தங்களிடம் போதுமான நீர் இல்லை என்று கூறும் கர்நாடகா, காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
ஆனால்,கர்நாடகா தங்களிடம் போதுமான நீர் இல்லை என்று கூறி காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கர்நாடகாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அப்போது கர்நாடகா அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியிலிருந்து திரும்பிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில்உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய தரவுகளின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது