10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ (CBSE) மாணவர்களுக்கு ஆண்டு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது குறித்த உறுதியான அறிவிப்பை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் எழுதலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : janhvi kapoor : சூரியாவுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்!
இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் மட்டும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது.
இந்தியா முழுக்க புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
https://x.com/ITamilTVNews/status/1759843291947037000?s=20
இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.