cctv : சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் அடுத்த 1 மாதத்திற்குள் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை x ம்,மற்றும் H , H1 Drugs குறிப்பிட்டுள்ள மருந்து. மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துகடைகளிலும்
குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
Also Read : https://itamiltv.com/modi-made-corrupt-people-to-cm-of-state/
தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் (cctv) போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.