தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் காலம் தாள்த்தி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சூதாட்ட நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும், வரும் ஆண்டுகளில் இந்தத் தொகை 29 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதில்
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு 1 இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம்.
- ஆன்லைன் விளையாட்டுக்காக சுய ஒழுங்குமுறை அமைப்புகளை மத்திய 2 மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக எழும் 3 புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும்.
- 4 ஆன்லைன் விளையாட்டுகளை இந்தியாவின் சட்டம் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும்.
- ஒழுங்குபடுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டது
- மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.