7 OPS for nomination : தலைப்பைப் பார்த்தால் உங்களுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இயற்பெயர் பேச்சி முத்து என்பது பலருக்கும் மறந்து போன உண்மையாகும்.
இராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் இவர் பி.யு.சி். படித்திருத்திருப்பதால், அப்போதிருந்தே அவருக்கு இங்கு அறிமுகம் இருக்கிறது.
கடந்தமுறை சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதியில் தன் மகனுக்குப் போராடி சீட்டு வாங்கி வெற்றி பெற வைத்த ஓ.பி.எஸ். இம்முறை அத்தொகுதியை டி.டி.வி. தினகரனுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்.
அவர் மகனும், சிட்டிங் எம்.பி.யுமான ரவீந்தரநாத்தை இராமநாதபுரம் தொகுதியில் நிறுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுயேட்சையாக தானே இங்கு போட்டியிடுகிறார். இத்தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடனை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இதையும் படிங்க : “அய்யோ செங்கல் போச்சே..!” – அதிர்ச்சியில் அமைச்சர் உதயநிதி..!
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் ஜாதி ஓட்டுகளை நம்பிதான் கடந்த முறை நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவரால் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகளைதான் அறுவடை செய்ய முடிந்தது.அதே பாணியில் சாதி ஓட்டுகளை நம்பிதான் ஓ.பி.எஸ். அங்கு போட்டியிடுகிறார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனி இம்முறையும் மீண்டும் அவரே களம் காண்கிறார். எல்லா எம்.பி.களை போலவே நவாஸ்கனிக்கும் “தொகுதி பக்கம் அதிகம் தலை காட்டுவதில்லை.தொகுதி பிரச்னையுக்கு அதிகம் குரல் கொடுக்கவில்லை.
தொகுதியில் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வரவில்லை” என்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் சிறுபான்மையினர் என கணிசமாக வாக்குகளை அள்ள போதுமான பணமும் இருப்பதால் அவர் நம்பிக்கையுடன் வலம் வருகிறார்.
இத்தொகுதியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா முதல் மாவட்ட செயலாளர் முனியசாமியோ அவரது மனைவியும் மாநில மகளிர் அணி செயலாளருமான கீர்த்திகா முனியசாமி வரை பலரும் போட்டியிட முன்வராத நிலையில்தான்,
தொகுதியில் அறிமுகமில்லாத விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஜெயப்பெருமாளை களம் இறக்கியுள்ளது அ.தி.மு.க.
இவரது சகோதரர் பொன்னையா ஒரு சிட்டிங் ஐ.ஏ.எஸ். “ஜாதி ஓட்டுகளும் இரட்டை இலை சின்னமும் கை கொடுக்கும்” என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயபெருமாள்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், சுயேச்சை சின்னங்களான வாளி, திராட்சைப்பழம், பலாப்பழம் என்ற மூன்று சுயேச்சை சின்னங்களில் ஒன்றை தனக்கு ஒதுக்கக்கோரி வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஓ.பி.எஸ். அதனை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
அதன் விளைவு மதுரை மாவட்டத்தில் கருமத்தூர், உசிலம்பட்டி ,திருமங்கலம் போன்ற பகுதிகளில் ஒய்யாதேவர் ,ஒச்சாதேவர், ஒய்யாராமர் போன்ற தந்தை இன்ஸ்சியலை கொண்ட பன்னீர்செல்வம் என்ற பெயரிலுள்ள வாக்காளரை தேடிப்பிடித்து அவர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
இதுவரை ஒ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் 7 OPS for nomination. ஏழு பேருமே ஓ.பி.எஸ். கேட்ட அதே மூன்று சின்னங்களை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை மிகவும் குழப்பம் அடைய செய்துள்ளது .
இந்துக்கள் புனித தலமாக கருதும் காசியை உள்ளடக்கிய வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுவதை போலவே, தமிழ்நாட்டின் புனித நகரமான இராமேஸ்வரம் உள்ளடக்கிய இராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிடுகிறாராம்.
இவரின் தேர்தல் செலவுகளை பி.ஜே.பி.யே ஏற்றுக்கொண்டிருப்பதாக ஒரு தகவலும் தொகுதியில் ரகசியமாக உலா வருகிறது.
பி.ஜே.பி .மற்றும் ஜாதி ஓட்டுகள் மட்டுமே நம்பி நிற்கும் ஓ.பி.எஸ். “இத்தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் எனது பலத்தை நிரூபிப்பேன். மக்களும், அ.தி.மு.க.வினரும் என் பக்கமே இருக்கின்றனர் என்பதை எடப்பாடிக்கு புரிய வைப்பேன்” என்றெல்லாம் சூளுரைத்து வருகிறார்.
ஜெயலலிதா சாவுக்காக சசிகலா,தினகரன் ஆகியோரை எதிர்த்து ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்திய இவர், அவர்களோடு இணைந்து, இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது தொகுதியில் முணுமுணுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
ஜாதி ஓட்டுகளை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பெருமாள் பிரிக்கும் நிலையில் நவாஸ்கனி மிகவும் தெம்பாக வாக்கு சேகரித்து வருகிறார். “அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பெருமாள் தோற்றாலும் பரவாயில்லை.
ஆனால் ஓ.பி.எஸ். ஒருபோதும் ஜெயித்து விடக்கூடாது அவரை மிகவும் படுதோல்வி அடையவைக்க வேண்டும்” என்பதில் அ.தி.மு.க.வினர் குறியாக இருக்கிறார்கள்.
இந்த சூழல் எல்லாம் நவாஸ்கனிக்கு மறைமுக ஆதரவு பெருகுவதையே காட்டுவதால், பேச்சிமுத்து (ஓ.பி.எஸ்) கரை சேருவாரா என்பதே எல்லார் மனதிலும் எழுகின்ற கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க : ”செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து பேசிய கனிமொழி…”- கரூரில் பரபரப்பு !