வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

Chance-of-heavy-rain-due-to-atmospheric-circulation
Chance of heavy rain due to atmospheric circulation

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chance-of-heavy-rain-due-to-atmospheric-circulation
Chance of heavy rain due to atmospheric circulation

மேலும் நாளை தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மழை பெய்யக்கூடும் என்றும்  அதிகபட்ச வெப்பநிலை 34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாளை வரை தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chance-of-heavy-rain-due-to-atmospheric-circulation
Chance of heavy rain due to atmospheric circulation

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Total
0
Shares
Related Posts