Chance of heavy rain : இன்று (07.05.24) தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது.
இதையும் படிங்க : திமுகவின் மோசமான மூன்றாண்டு கால ஆட்சி – சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி – டிடிவி!
சில மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.
இதனிடையே அக்னி நட்சத்திரம் தொடங்கி தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெயில் தலையைப் பிளக்கிறது.
குறிப்பாக சேலம், காஞ்சீபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் கொளுத்துகிறது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசம் கூடும் என ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வருகிற மே 10ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலில் தான், வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.. Chance of heavy rain
“வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நாளையும் (08.05.24) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 12ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிறையில் தாக்கபட்ட சவுக்கு சங்கர்.. அரசுக்கு அறைகூவல் விடுத்த எடப்பாடி!