6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று காலை சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. ன்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது.
சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.