தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்த நிலையில், நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெர்வித்துள்ள வானிலை மையம், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.