கங்கனா , ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட ‘சந்திரமுகி 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது.
வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பிரபு,ஜோதிகா , வடிவேலு , நாசர் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது .
லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ,வடிவேலு , பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, ஸ்ரிஷ்டி டாங்கே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . ஆனால் சந்திரமுகியின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு சந்திரமுகியின் பாகத்திற்கு கிடைக்கவில்லை என ஓப்பனாக தெரிந்துவிட்டது.
இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் டீசெண்டான வெற்றியை பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்.26 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.