தமிழ் சினிமாவில் நீண்ட நெடு நாட்களுக்கு பின் நகைச்சுவை கலந்த சிறப்பான தரமான பேய் படமாக உருவான படம் சந்திரமுகி 2 .
வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபு ஜோதிகா வடிவேலு நாசர் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை காண ரசிகர்கள் செம ஆர்வமாக உள்ளனர்.
லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ,வடிவேலு , பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, குக் வித் கோமாளி புகழ் ஸ்ரிஷ்டி டாங்கே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் குறித்த தேதியில் வெளியாகாது என அதிர்ச்சி தரும் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது .
அட ஆம் மக்களே சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் திரையரங்கில் கோலாகலமாக வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் VFX வேலைகள்இன்னும் முடியாத காரணத்தினால் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.