ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி அன்று பிற்பகல் சரியாக 2:35 மணியளவில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .
இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல வருட உழைப்பின் சாட்சியாக உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கும் வகையில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் ‘சந்திராயன் -3’ விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்து .
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ‘சந்திராயன் -3’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுவிட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியில் லேண்டரை தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .