இணையப் பயன்பாடு என்ற சந்தையில் தனி ராஜாங்கத்தை நடத்தி வரும் google நிறுவனத்தை அச்சம் கொள்ள வைத்துள்ளது ஒரு புதிய நிறுவனம் என்றால் நம்ப முடிகிறதா.?
ஆம் google நிறுவனத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை OPEN AI நிறுவனத்தின் CHATGPT.
கேட்கும் கேள்விகளுக்கு பிரத்தேக முறையில் பதில்களைத் தரும் CHAT GPT பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அறிமுகமான சில மாதங்களிலே பயனர்களின் எண்ணிக்கையில் இன்ஸ்டாகிராமுடன் போட்டிப் போடும் அளவிற்கு CHAT GPTசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது OPEN AI நிறுவனம்.
பெரும்பாலும் முதலீடுகளைச் செய்து தொழில்நுட்பத்தை உருவாக்க முனைப்புக் காட்டும் மைக்ரோசாப்ட் (Microsoft), அடுத்த பாய்ச்சலாகத் தனது தேடு பொறியான (SEARCH) CHAT GPT செயற்கை நுண்ணறிவு செயலியை தனது தொழில்நுட்பத்தை இனைத்துள்ளது.
இந்த நிலையில் ஆராய்ச்சி நிலையிலிருந்த பொழுதே பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற (CHAT GPT) தற்பொழுது மைக்ரோசாப்ட்(Microsoft) இயங்கு தளத்தின் பிரதான தேடு பொறியில் இணைந்திருப்பது உலகின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போய் உள்ள கூகுளின் google தாய் நிறுவனமான அல்பபெட்ஸ் (Alphabets) தொடர்ந்து ஓபன் ஏ ஐ பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இப்பொழுது chat gpt-க்கு போட்டியாகப் BARD என்ற தொழில்நுட்பத்தை google நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதற்கட்டமாக நம்பத குந்த பயனர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்தக் கூகுள் google நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இது google தேடு பொறியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்பமே சறுக்கல் என்பது போல BARD மென்பொருளின் காணொளி தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தவறான தகவல் BARDஅடித்திருக்கிறது. தவறான பதில்கள் வருகிறது என்றாலும்,
google நிறுவனத்தின் பிழை அதன் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடியைச் சரி செய்ய செய்யும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. (Microsoft) விளம்பரங்கள் மூலம் கூகுள் நிறுவனம் சுமார் 14 லட்சத்துக் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்யை இடுகிறது.மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது.
google பண்ணுங்கள் என்பது தற்பொழுது chat gpt பாருங்கள் என்று மாறி உள்ளது. இந்த மாற்றம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் நம்புகிறது. ஆனால் அதனை மீறி முதல் இடத்தை தக்க வைப்பது கூகுளின் எண்ணமாக இருக்கிறது.
AI தொழில்நுட்பத்தை வைத்து இரு பெறும் நிறுவனங்கள் இடையே போட்டி தொடங்கியுள்ள நிலையில் இது பெரும் தொடக்கம் தான் என்றும் வல்லுநர்கள் கனித்துள்ளனர்.
இந்த போட்டியில் முந்தி செல்ல இரு நிறுவனங்கள் வரும் நாட்களில் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கின்றன. ஆனால் CHAT GPT-ன் இந்த தொழில்நுட்பம் பிரதானமான ஒன்றாக மாறினால் அது தரும் தவறான தகவல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.