ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
இந்நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,485 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,880 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் 4,493 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.35,944 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் 4,505 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200ஆகவும் விற்பனையாகிறது.