ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று , 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,555 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.44,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 5,555 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 44,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,550 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.36,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 4,550 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.36,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300ஆகவும் விற்பனையாகிறது.