ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் 5,452 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,616 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் 5,460 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,680 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 4,473 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,784 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.