ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) கடந்த இரண்டு நாட்களாக ஒரே விலையிலேயே நீடிக்கிறது.
அதன்படி நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.44,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றாமுமின்றி ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.44,360 ஆகவும் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 4,542 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.36,336 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.