ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,505 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5, 485 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து கிராம் 4,509 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,072 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து கிராம் 4,493 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,944 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.