ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் 5,437 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.43,496 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராம் 5,430 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.43,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து கிராம் 4,454 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,632 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து கிராம் 4,448 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,584 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,300ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,800ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.