அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை (gold price) இன்று ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,660 ஆகவும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,280 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,670 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை அதிரடியாக ரூ.1.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.