செப்டம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 44 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480 ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410 ஆகவும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,489 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 குறைந்து ஒரு கிராம் ரூ.4,432 ஆகவும், சவரனுக்கு ரூ.456 குறைந்து ஒரு சவரன் ரூ.35,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 ஆகவும் விற்பனையாகிறது.