மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் (KuKa Selvam) உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னையின் முக்கிய பகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் கு.க.செல்வம் (KuKa Selvam). கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீது கோபம் கொண்ட இவர், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் .
இதையடுத்து மனம் மாறி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் .
இதையும் படிங்க : https://itamiltv.com/pongal-gift-money-will-be-decided-by-cm/
இளம் வயது முதல் கட்சியில் முக்கிய பங்காற்றி வந்த கு.க.செல்வத்தின் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கு.க.செல்வத்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில், திமுக பொருளாளரும், எம் .பி.யுமான டி.ஆர்.பாலுவும் மற்ற அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர் .